search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி விற்பனை"

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்னர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்த செரிப் (31).நாராயணநகர் பகுதியை சேர்ந்த சண்முகம்( 54), செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (39), ஆகியோர் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனைசெய்து வந்துள்ளனர். 

    தகவல் அறிந்து அப்பகுதியில் ரோந்துசென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து வழக்குப்பதிவுசெய்து கைது செய்தார்.

    மேலும் அவர்களிடம் இருந்து 109 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.300 பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
    புதுவை அருகே ஆன் -லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் கொட்டகை அமைத்து ஒரு கும்பல் ஆன்-லைன் மூலம் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    அப்போது அந்த கொட்டகையில் கூட்டம், கூட்டமாக சிலர் வந்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கொட்டகையில் அதிரடியாக புகுந்தனர்.

    அப்போது அங்கு ஆன்- லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திருச்சி முசிறியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 27), பட்டானூரை சேர்ந்த சுந்தர் என்ற தக்காளி சுந்தர் மற்றும் திலாஸ்பேட்டையை சேர்ந்த சரவணன் (48) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த லாட்டரி விற்பனையை கருவடிகுப்பத்தை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் வில்லியனூர் குமார், ராஜ்குமார் ஆகி யோர் நடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து விக்னேஸ் வரன், சுந்தர், சரவணன், ஆகிய 3 பேரையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கருவடிகுப்பத்தை சேர்ந்த சரவணன், குமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருச்சி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகள், மார்க்கெட்டுகளில் குவிந்துள்ளனர். இதேபோல் பஸ், ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஒரு கும்பல் படு ஜோராக ஈடுபடுகிறது. இது குறித்து மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிகள் குறித்து விசாரித்து வந்தனர்.

    அப்போது திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கே.கே.நகர், அரியமங்கலம், திருவானைக்காவல், பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், பெரியகடை வீதி, உய்யக்கொண்டான்  திருமலை, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆங்காங்கே பொருட்கள் வாங்குவது போல் பொதுமக்கள் வேடத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேர் என மொத்தம் 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

     திருவானைக்காவல் சரவணன் (45), உறையூர் ராம கிருஷ்ணன் (54), குமார் (29), பாண்டமங்கலம் ஹித யத் உசேன் (54), உய்யக்கொண்டான் திருமலை மணிகண்டன் (25), ஆர்.எம்.எஸ்.காலனி தினகரன் (62), அரியமங்கலம் சீனிவாச நகர் முத்துமணி (28), மதியழகன் (65), காட்டூர் ரவி (40), சங்கிலியாண்டபுரம் இளையராஜா (35), குமார் (32), காந்தி மார்க்கெட் மன்னர் பிள்ளை தெரு செந்தில்குமார் (38), பாலக்கரை திருமூர்த்தி (27), முகமது உசேன் (40) ஆகியோர் ஆவர். மேலும் சாகின்ஷா, பாண்டியன், நடராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஓசூரில் சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஓசூர்:

     கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நகர தி.மு.க. சார்பில், சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஓசூர் நகராட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். 

    நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மற்றும் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ. முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.
    வில்லியனூரில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால்பேட் பகுதியில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீஸ்காரர்கள் அமீதுஉசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு செல்போனில் பேசியபடி நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஸ்வத்தமன் (வயது24), முரளி (26), ராஜேஷ் ஆகியோர் என்பதும் இவர்கள் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    ×